நார்வே நாட்டின் மின்சாரத்தின் விலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் குறைந்ததால் அந்நாட்டில் சில பகுதிகளில் மின்சாரம் உபயோகிக்கும் அளவுக்கு ஏற்ப மக்களுக்கு பணம் வழங்கப்பட்டது.
இதுவரை நாம் வீட்டில் மின்சாரம் உபயோகிக்கும் அளவை பொருத்து மின்சாரகட்டணம் செலுத்தி வருகிறோம். ஆனால் மின்சாரம் உபயோக்கிகும் அளவுக்கு ஏற்ப மின்சார நிறுவனங்கள் மக்களுக்கு பணம் செலுத்துவதை நாம் பார்த்திருக்க மாட்டோம். ஆனால் அவ்வாறு நார்வே நாட்டில் நடைபெற்றுள்ளது. உலகில் மிக அதிக அளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றாக நார்வே உள்ளது.
அங்கு சுமார் 99 விழுக்காடு மின்சாரம் நீர்மின் ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சிறந்த இயற்கை நீர்வளங்களை கொண்டுள்ளதால் நீர்மின்ஆற்றல் மின் உற்பத்தி, சூரிய ஆற்றல் உற்பத்திக்கான வளங்கள் குறைவாக இருப்பினும், சூரிய மின் ஆற்றல் தர சிலிக்கான் மற்றும் சிலிக்கான் சூரிய மின் ஆற்றல் கடத்துதிறக் கலங்கள் உற்பத்தியில் உலகளவில் மிக அதிக அளவில் நார்வே ஈடுபட்டுள்ளது. மின்சார காரும் நார்வே நாட்டில் அதிகஅளவில் பயன்பாட்டில் உள்ளது. மேலும் வளர்ந்துவரும் நாடுகளும் தங்கள் நாட்டில் புவி மாசுபடுவதை தடுப்பதற்கும் சுத்தமான மின்சார உற்பத்தி செய்வதற்கும் நார்வே ஒரு முன்னோடியாக திகழ்ந்து வருகிறது.
அதிக மின்சார ஆற்றல் உற்பத்தியை கொண்ட நாடானா நார்வேயில் மக்களுக்கு இன்னொரு சலுகையும் உள்ளது. அதுதான் மின்சாரத்தின் விலை பூஜ்ஜியத்துக்கும் கீழ் சென்றால் மக்கள் மின்சாரம் உபயோகிக்கும் அளவுக்கு மின்சார நிறுவனங்கள் பணம் தருவது. இந்த நிலை தற்போது நார்வே வரலாற்றில் இரண்டாவது முறையாக நிகழ்ந்துள்ளது.
நார்வே விற்பனை நிலையமான E24 இன் படி, தலைநகர் ஒஸ்லோ மற்றும் கிறிஸ்டியன்சந்த் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சார விலைகள் நேற்று அதிகாலையில் நான்கு மணி நேரம் எதிர்மறையாக இருந்தன. இதனால் தெற்கு நோர்வேயில் வசித்தவர்கள் மின்சாரம் பயன்படுத்தியதற்காக பணம் பெற்றனர்.
நர்வே மின்சாரத்தின் விலை தீடீர் வீழ்ச்சிக்கு சமீபத்திய வாரங்களில் பெய்த அதிக அளவிலான மழை மற்றும் குறைந்த அளவிலான மின்சார ஏற்றுமதி, ஸ்வீடனில் இருந்து அதிக அளவில் அணுசக்தி இறக்குமதி செய்யப்பட்டது உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இனி நோர்டிக் நாட்டில் குளிர்காலம் வருவதால் மின்சார விலைகள் உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.