பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது சுவாரசியாக சென்று கொண்டிருக்கிறது. நேற்றய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் யாரிடம் பிரச்சனை இருக்கிறதோ அதனை புகாராக எழுத வேண்டும் என்று பிக் பாஸ் அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து, பலரும் சனம் மற்றும் பாலா இடையேயான பிரச்சினைக்கு குரல் எழுப்பி வந்தனர்.
இருப்பினும், நேற்றைய நிகழ்ச்சியில் சனம் மற்றும் பாலாஜி விஷயத்தில் நடுவராக இருந்து தீர்ப்பு வழங்கிய சுசித்ரா பாலாஜிக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பை அளித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த தீர்ப்பை ரசிகர்கள் பலரும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரம் குறித்து வனிதா பேட்டி ஒன்றில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.
அதில் அவர் கூறியதாவது, அவன் எப்படி ஒரு பெண்ணை குறித்து அப்படி ஒரு வார்த்தையை சொல்லுவான். அவனுக்கு என்ன தைரியம். அவனுடைய அம்மா பற்றியே அவன் அப்படி சொன்னவன் தானே.
அவன் பிறப்பில் எதோ தவறு இருக்கிறது. அதான் அப்படி பேசுகிறான். நான் உள்ளே சென்றால் அவனை செருப்பால் அடித்து விடுவேன்.
ஒரு நபரை பற்றி அவர் செய்யும் விஷயங்களைப் பற்றி சொல்லலாம் இல்லை அவரைப்பற்றி கருத்துக்களைச் சொல்லலாம்.
ஆனால் வாய்ப்புக்காக அவர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்டார் என்று சொல்ல அவன் யார் இவனும் அப்படி செய்து தான் மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றால் இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் கற்பழிப்பில் ஈடுபடும் நபருக்கு கொடுக்கும் தண்டனையை கொடுக்க வேண்டும். என ஆக்ரோஷமாக பேசியுள்ளார்.