தாம்பத்திய வாழ்க்கை என்பது,கணவன், மனைவி இருவருக்கும் அன்யோனியம் மிகவும் முக்கியமான ஒன்று.
பொதுவாக, உறவுக்கு பின்னர் ஒரு சில வேலைகளை நாம் செய்யவேண்டும். ஆனால், சோர்வு காரணமாகவும், களைப்பு காரணமாகவும் பலரும் இதனை பின்பற்ற தவறுகிறார்கள். அவை என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
உடனே எழுந்திருப்பது கூடாது
உறவுக்குப்பின், உடனே எழுந்து போவதை தவிர்க்க வேண்டும். இப்படி செய்வதால் தம்பதியினரிடம் நெருக்கம் நீடிக்காது.
இதற்காக மட்டும் தான் நான் இருகிறேன் என்ற எண்ணம் மனைவி மனதில் தோன்ற வாய்ப்புண்டு.
குளிப்பது
உறவு முடிந்த உடனே குளிக்க செல்வது ஆண், பெண் இருவரிடமும் உள்ள பழக்கம். இதனை முதலில் குறைத்துக்கொள்ள வேண்டும்.
உறவுக்கு பிறகு சிறிது நேரம் மனைவி மனம் விட்டு பேசி பேச வேண்டும். இதனால் உறவில் மகிழ்ச்சி நீடிக்கும்.
உறவு முடிந்து சிலமணி நேரம் துணையுடன் வீட்டில் நேரம் செலவிட வேண்டும். அதேபோல் வீட்டில் இருந்து வெளியேறும் பட்சத்தில் கட்டாயம் குளித்துவிட்டுதான் செல்ல வேண்டும்.
உறவுக்கு முடிந்த பிறகு வயிறு முட்ட சாப்பிடக் கூடாது. அதே போல, உறவுக்கு முன்பும் வயிறு முட்டசாப்பிடக்கூடாது.
பால் அளவாக குடிக்கலாம். உடனடியாக மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலுக்கு கடுமையான வேலை செய்வதைதவிர்த்து விட வேண்டும்.