பிறந்தது முதல் இறக்கும் வரை அழகாகவே இருக்க வேண்டும் என்று நினைப்பது மனித இயல்பு.
இன்றைய காலக்கட்டத்தில் மாசடைந்த சூழல் பலருக்கு இளம் வளதிலேயே இளநரை பிரச்சனையை உண்டாக்கிவிடுகிறது.
வயதாகும் போது நரை முடி வந்தால் கூட ஏற்றுக்கொள்ள முடியும். அதுவே, இளம் வயதில் வந்துவிட்டால் எவராலும் நிச்சயம் அதனை ஏற்க மறுத்துவிடும். இந்த இளநரை பிரச்சனை ஒருவரது அழகை மட்டும் கெடுப்பதில்லை, கூடவே ஒருவரது தன்னம்பிக்கையையும் சேர்த்து உடைப்பதோடு, மனஅழுத்தத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இளநரை பிரச்சனையை எப்படி சமாளிப்பது?
ஆரோக்கியமான உணவுப் பழக்கம் ஒன்றே இளநரை ஏற்படுவதை தடுப்பதற்கான ஒரே வழி. உணவில் பச்சை காய்கறிகள், கீரைகள், தயிர் மற்றும் பழங்கள் போன்றவற்றை சேர்க்க வேண்டும். இப்படிப்பட்ட ஆரோக்கியமான உணவு மற்றும் முறையாக உடற்பயிற்சி செய்வதன் மூலம் இளநரை ஏற்படுவதை தடுப்பதோடு, கூந்தலுக்கும் வலு சேர்க்கவும் உதவும்.
இங்கே, கொடுக்கப்பட்டுள்ள வீட்டிலேயே செய்யக் கூடிய எளிய ஹேர் கேர் முறைகளை முயற்சித்து பாருங்கள். நிச்சயம் பலனளிக்கும்…
கறிவேப்பிலை மற்றும் தேங்காய் எண்ணெய்
சிறிது தேங்காயில், சில கறிவேப்பிலைகளை சேர்த்து கொதிக்க விடவும். எண்ணெய் சேர்க்கப்பட்ட இலைகள் கருப்பு நிறத்திற்கு மாறும் வரை கொதிக்க விடவும். பின்பு, அந்த எண்ணெயை ஆற வைத்து, வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். தயார் செய்த இந்த எண்ணெயை, தலையில் தேய்த்து நன்கு மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற விடவும். மறுநாள் காலை எழுந்து, மிதமான ஷாம்பூ கொண்டு தலைக்கு குளித்திடவும். ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் முன்பு, முதல் நாள் இரவே இந்த எண்ணெயை தலைக்கு தேய்த்து மறுநாள் குளிக்க வேண்டும் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி, முடி கால்களில் மெலமின் சேர உதவுவதோடு, இளநரையையும் விரட்டிவிடும்.
ப்ளாக் டீ
ஒரு டம்ளர் தண்ணீரில், 3 டேபிள் ஸ்பூன் ப்ளாக் டீ இலைகளை சேர்க்கவும். அத்துடன், ஒரு டீஸ்பூன் உப்பு சேர்க்கவும். ஒரு டம்ளர் தண்ணீர், பாதி டம்ளராக குறையும் வரை கொதிக்க விடவும். பின்னர், அதனை வடிகட்டி ஆற வைக்கவும். தயார் செய்து வைத்துள்ள இந்த கலவையை, தலைக்கு குளித்த பின்பு, முடியில் தேய்க்கவும். இது எந்தவொரு கெமிக்கலும் இல்லாத இயற்கை ஹேர் டை ஆகும். இந்த ப்ளாக் டீ பயன்படுத்துவதன் மூலம் மிருதுவான கூந்தலையும் பெற முடியும்.
பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
2:3 என்ற விகிதக் கணக்கல் பாதாம் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து கொள்ளவும். முடியில் வேர்க்கால்களில் படும்படி இந்த கலவை தலையில் தடவி, நன்கு மசாஜ் செய்யவும். 30 நிமிடங்களுக்கு பிறகு, மிதமான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலவி விடலாம். வைட்டமின் ஈ அதிகம் உள்ள பாதாம் எண்ணெய், வேர்க்கால்களுக்கு ஊட்டம் அளிப்பதோடு, இளநரையையும் போக்கிவிடும். வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை சாறு, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.