யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளி பகுதியில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி றோலரருக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் பனாங்கொடை பகுதியை சேர்ந்த எஸ்.பி. பிரேமரட்ன (வயது 62) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.
வடமராட்சி – கொடிகாமம் வீதி திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் குறித்த பணியில் தொழிலாளி ஈடுபட்டிருந்த போது , பணியில் ஈடுபட்டிருந்த றோலருக்குள் சிக்குண்டு, படுகாயமடைந்துள்ளார்.
அதனை அடுத்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.



















