அமெரிக்காவின் அதிபர் தேர்தல் குறித்த செய்திகள் உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பி வருகின்றது. அனைத்து ஊடகங்களில் தலைப்பு செய்தியாக இது தான் இருக்கின்றது. அமெரிக்கர்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு நாட்டின் மக்களும் இந்த தேர்தலில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
எல்லோருடைய மனதிலும் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப்பா அல்லது ஜோ பிடன் வருவாரா என்ற கேள்வி எழுந்து இருக்கின்றது. இந்த நிலையில் பாலிவுட் நடிகையான சன்னி லியோன் இது குறித்து மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக தெரிவித்து இருக்கின்றார். முடிவுகளின் போக்கை கருத்தில் கொண்டு மிகுந்த சஸ்பென்ஸை அவர் உணர்கிறார்.
அவருடைய கணவர் டேனியல் உடன் இணைந்து இந்த நேரத்தில் முடிவுகளை கண்காணித்து வருகிறார். தனது இணையப்பக்கத்தில் ஒரு வேடிக்கையான பதிவை அவர் பகிர்ந்து இருக்கின்றார். கணவருடன் இருக்கும் சன்னிலியோன் இருவரும் வாக்களித்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், அதில் சன்னிலியோன் தனது உற்சாகத்தை ஒரு வேடிக்கையான முறையில் வெளிப்படுத்தி இருக்கின்றார். இந்த சஸ்பென்ஸ் என்னை கொல்கிறது என்று பதிவிட்டு இருக்கிறார். சன்னிலியோனின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
ஆறு மாதத்திற்கு பின்னர் அவர் மும்பைக்கு திரும்பியிருக்கிறார். இதுபற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமானத்தில் இருந்தவாறு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ஆறு மாதத்திற்குப் பின் மும்பை திரும்பும் நேரம் வந்துவிட்டது புதிய சாதனை என்று கூறியுள்ளார்.



















