சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகன்.சினிமா மட்டுமின்றி மாடலிங் துறையிலும் கலக்கி வருகிறார் இந்த மலையாள பியூட்டி. விஜய் நடித்து வெளிவர இருக்கும் மாஸ்டர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இவர் தனது அட்டகாசமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவை வைரலாகி இளைஞர்களின் இதயங்களை கொள்ளையடித்து உள்ளது.
நடிகர் தனுஷின் D43 படத்தில் நாயகியாக நடிக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், சமீபத்தில், அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியானது. பாலிவுட்டில் நடிகர் ஷாகித் கபூர் உடன் வெப்சீரிஸ் ஒன்றிலும் மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.மேலும் விஜயுடன் நடித்து வரும் மாஸ்டர் திரைப்படம், தீபாவளி அன்று வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
படத்தில் வரும் மாளவிகா மோகனனின் அந்த கண்ண பார்த்தாக்கா வீடியோ பாடலையும், படத்தையும் தீபாவளிக்கு இல்லை என்றாலும், பொங்கலுக்காவது தியேட்டரில் பார்த்து விட வேண்டும் என ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.




















