ஹட்டன் பகுதியில் இதுவரையில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 05 ஆம் திகதி தும்புறுகிரிய பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதனையடுத்து அவரை மாத்தறை சுயதனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து சென்றதுடன் தொடர்ந்து குடும்பத்தாருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கணவருக்கும் மகனுக்கும் தொற்று இருப்பது உறுதியானது. அதன் பின் அவர்களும் சுயதனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மேலும் இரண்டு பெண் பிள்ளைகள் தொடர்ந்து வீட்டில் தனிமைப்படுத்தப்படிருந்த நிலையிலேயே ஒரு பிள்ளைக்கு கொரோனா தொற்று இருப்பது பி.சி. ஆர் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. தற்போது அவர் மாத்தறை சுயதனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்து செல்ப்பட்டுள்ளார்.



















