இரத்தினபுரி மாவட்ட குருவிட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள சிறைச்சாலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சிறைச்சாலைக்குள் செல்லவும், வெளியேறவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை சிறைச்சாலைக்குள் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குருவிட்ட சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில் 14 பெண்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.
52 கைதிகள் மற்றும் 2 சிறைச்சாலை அதிகாரிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் 14 பெண் கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.