கொழும்பில் மட்டும் நேற்றைய தினம் 541 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது பேசிய அவர்,
நேற்றைய தினம் மட்டும் 704 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் 541 பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்களாவர்.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்புகளை வைத்திருந்த பலர் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தல் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளிலேயே அதிகமானோர் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.