இந்தியா – காஷ்மீர் மாநிலம் பாண்டிபோரே மாவட்டம் வேவான் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார்.
இதனயடுத்து வைத்தியலையில் கர்ப்பிணி பெண்ணுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்ட போது கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனியடுத்து அவருக்கு, சிகிச்சை அளிக்க மறுத்த வைத்தியர்கள் அங்கிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வேறு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள்.
எனினும் பிரசவ வலி அதிகமானதால், அங்கேயே சிகிச்சை அளிக்குமாறு அவரது குடும்பத்தினர் கெஞ்சியும், வைத்தியர்கள் சிகிச்சை அளிக்க மறுத்து வெளியேற்றினர்.
இந்த நிலையில் வைத்தியலையிலிருந்து வெளியேற்றப்பட்ட அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு மருத்துவமனைக்கு வெளியிலேயே திறந்தவெளியில் குழந்தை பிறந்ததுள்ளது.
அங்கிருந்தவர்கள் போர்வைகளை வழங்கி அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு உதவினார்கள். அங்குள்ள சில பெண்கள் பிரசவத்துக்கு உதவி புரிந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.