கொழும்பு தாமரை தடாகத்திற்கு அருகிலுள்ள சொகுசு கார் விற்பனை நிலையமொன்றின் மீது, சொகுசு வாகனமொன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் பெறுமதியான வாகனக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு வாகனம், தாமரை தடாகத்திற்கு அருகிலுள்ள கார் விற்பனை நிலையத்தின் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் வாகன விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பெறுமதியான சொகுசு கார் ஒன்றுக்கும், வாகன விற்பனை நிலையத்திற்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கறுவாத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.