களுத்துறையில் ஆயுதங்களுடன் கைதான குழுவின் 4 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடந்த 7ஆம் திகதி வாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இரண்டு வாகனங்களில் சென்ற குழுவொன்றை பொலிசாரும், விசேட அதிரடிப்படையினரும் மடக்கிப்பிடித்திருந்தனர். அந்த குழுவின் 4 பேர் கொரோனா தொற்றுடன் இருப்பது இன்று (16) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பின்னர், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 13 ஆம் திகதி பூசா சிறையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். சிறையில் நடத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவர்களிற்கு தொற்று உறுதியானது.
அதன்படி, தெற்கு களுத்துறை காவல்துறை அதிகாரிகள், எஸ்.டி.எஃப் அதிகாரிகள், களுத்துறை நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் கைது நடவடிக்கையில் பங்கேற்ற சிறை அதிகாரிகள் ஆகியோரும் இன்று (16) பி.சி.ஆர் சோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.