போகம்பரை சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் பெருமளவானோருக்கு கொரோனா தொற்று பரவிவருவதால் கண்டிநகரம் பாதுகாப்பற்றதாக மாறி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
போகம்பரை சிறைச்சாலைக்குள் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட 150 பேர் வரை இருக்கலாம் என தனக்கு தகவல் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
போகம்பரை சிறையில் உள்ளவர்களை வேறு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவேண்டும்.
சிறைச்சாலையை தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்துவதால் கண்டி நகரத்திற்கு ஆபத்து என அவர் தெரிவித்துள்ளார்.



















