நெதர்லாந்தின் முக்கியமான சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்னாது.
Schiphol சர்வதேச விமான நிலையத்திலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
KLM நிறுவனத்தின் போயிங் 747-400 விமானம் அதே நிறுவனத்தின் A330 பயணிகள் விமானத்துடன் மோதி சேதடைந்தது.
கொரோனா காரணமாக Schiphol சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்களும் நிறுத்தப்பட்டிருந்துள்ளது.
போயிங் 747-400 விமானத்தை புதிய இடத்திற்கு மாற்ற இழுத்துச்செல்லப்பட்ட போது, விமானத்தின் முன் பகுதி A330 விமானத்தின் இறக்கையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், போயிங் 747-400 விமானம் சேதடைந்துள்ளது. எனினும், A330 விமானத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என KLM நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.
வேலை அழுத்தம் மிக அதிகமாக உள்ளது மற்றும் பணியை பாதுகாப்பாக மேற்கொள்ள மிகக் குறைவான ஊழியர்கள் உள்ளனர் என தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.