பரவலான தேர்தல் முறைகேடு மற்றும், தமக்கு எதிராக கருப்பின மக்கள் ஒன்று திரண்டு விட்டார்கள் என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்த ஜனாதிபதி டிரம்ப் மீது டெட்ராய்ட் வாக்காளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஜனாதிபதி டிரம்ப் தேர்தல் தோல்வியை சந்தித்த மாகாணங்களில் முறைகேடு நடந்துள்ளதாக தொடர்ந்து கூறி வருகிறார்.
ஜனாதிபதி தேர்தல் நாளான நவம்பர் 3-ம் திகதிக்கு பிறகு நாள் ஒன்றிற்கு குறையாமல் ஒருமுறையாவது, தமது டுவிட்டர் பக்கத்தில் நான் வென்றுவிட்டேன் என பதிவு செய்து வருகிறார்.
மட்டுமின்றி, அமெரிக்க மாகாணங்களின் தேர்தல் அதிகாரிகள் கூட்டமைப்பு, டிரம்ப் முன்வைக்கும் தேர்தல் முறைகேடு தொடர்பில் உரிய விளக்கங்களை அளித்துள்ளது.
இருப்பினும், ஜோ பைடன் வெற்றி ஒரு தேர்தல் முறைகேடு என்றே ஜனாதிபதி டிரம்ப் கூறி வருகிறார்.
இதனிடையே, அமெரிக்க கருப்பின மக்கள் தமக்கு எதிராக திரும்பியுள்ளனர், அவர்களே நாட்டின் தற்போதை நிலையற்ற தன்மைக்கு முக்கிய காரணம் என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இந்த நிலையில் வாக்காளர்களை ஜனாதிபதி டிரம்ப் அவமதித்ததாக கூறி டெட்ராய்ட் நகர மக்கள் ஜனாதிபதி டிரம்ப் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.
சனிக்கிழமை மிச்சிகன் மாகாணத்தில் கருப்பினத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் உள்ள மாவட்டம் ஒன்றில் தேர்தல் முடிவுகளை அறிவிக்க 14 நாட்கள் அவகாசம் கோரி குடியரசுக் கட்சி மனு அளித்துள்ளது.
இந்த நிலையிலேயே ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொய்யான தகவலை நாடு முழுவதும் பரப்புவதாக கூறி டெட்ராய்ட் நகர மக்கள் புகார் அளித்துள்ளனர்.