ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.
முன்னிலை சோசலிஸக்கட்சியின் நடவடிக்கையாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகாநந்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் ஆட்கொணர்வு வழக்கு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரான கோட்டாபய ராஜபக்சவை மன்றில் முன்னிலையாகுமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் முன்னதாக உத்தரவிட்டிருந்தது.
எனினும் இதனை ஆட்சேபித்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதே இன்றைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் மேன்முறையீட்டு நீதிமன்றம், யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான இடைக்கால தடையையும் விதித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்தபோது 2011ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் லலித் மற்றும் குகன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் வைத்து காணாமல் போயினர் என்று முறையிடப்பட்டது.