நாட்டில் நேற்றைய நிலவரத்தின் படி 337 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர்களில் பலர் கொழும்பில் பதிவாகியுள்ளனர்.
அந்தவகையில் பொரள்ளை , வெல்லம்பிட்டி , மற்றும் கொம்பனித்தெரு ஆகிய பகுதிகளில் 30 க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காண்பபட்டுள்ளனர்.
அத்துடன் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பில் மாத்திரம் 7,226 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் இதுவரை 5,391 தொற்றாளர்களும் , களுத்துறை மாவட்டத்தில் 776 கொரோனா தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நாட்டில் பாதிவாகிய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 20,508 ஆக உயர்ந்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 337 கொரோனா தொற்றாளகர்களின் எண்ணிக்கையில் 335 பேர் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் ஆவர்.
இதுவரையில் மினுவாங்கொட , பிரண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலை மற்றும் பேலியகொட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 16,978 ஆக அதிகரித்துள்ளதுடன், 5,921 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதோடு , 14,497 பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.