வெலிகந்தை கொரோனா சிகிச்சை நிலையத்திலிருந்து தப்பி ஓடுவதற்கு முயற்சித்த கொரோனா நோயாளி மீது தாக்குதல் நடத்திய தாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.
அம்பாந்தோட்டையில் உள்ள அம்பலாந்தோட்டை பகுதியை சேர்ந்த 30 வயதுடையவரே இவ்வாறு தப்பி ஓட முயன்றுள்ளார்.
இதன் போது சிகிச்சை நிலையத்தில் இருந்த தாதி நோயாளியை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து நோயாளிமீது தாக்குதல் நடத்திய தாதியை வெலிகந்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.