பலகோடி பெறுமதியிலான ஹெரோயின் மற்றும் ஆயுதங்களுடன் இலங்கைக்கு சொந்தமான படகு ஒன்று இந்திய கடலோர பாதுகாப்பு படையினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகம் – துாத்துக்குடி கடற்பகுதியில் வைத்து குறித்த படகை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியதுடன் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
குறித்த படகில் பல கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளும் ஐந்து துப்பாக்கிகளும் இருந்ததாக இந்தியச் செய்திகள் மூலம் தெரிய வருகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருள் மற்றும் படகு என்பன இன்று காலை தூத்துக்குடி கடலோர காவல் படை முகாமை அடைந்த அடைந்துள்ளது,
எனினும் அது டொடர்பிலான முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை