கொரோனா பரவல் காரணமாக நாட்டுக்கு திரும்ப முடியாது ஏனைய நாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 488 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
அதன்படி இலங்கை அரசாங்கத்தின் சிறப்பு அனுமதியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலின் துபாயிலிருந்து 370 பேரும், மாலைதீவிலிருந்து 69 பேரும், கட்டாரின் தோஹாவிலிருந்து 45 பேரும், அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நான்கு பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விமான நிலையத்தை வந்தடைந்த அனைவரும் தனியார் வைத்தியசாலை ஊழியர்களினால் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுடன், தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.