பிரித்தானியாவில் 14 வயது சிறுவனுடன் உடல் அளவில் நெருக்கமாக இருந்ததால், என்னுடைய வாழ்க்கையே நசமாகிவிட்டதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
பிரித்தானியாவின் இங்கிலாந்தின் Glouceste-ல் இருக்கும் Woolaston கிராமத்தில், Teah Vincent என்ற 32 வயது பெண் 14 வயது சிறுவன் ஒருவருடன் நெருக்கமாக இருந்ததால், அவரை சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பலரும் பாலியல் குற்றவாளிகளாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆனால் அவரை நீதிமன்றம் குற்றவாளி அல்ல என்று கூறிவிட்டதாகவும், இதனால் அவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், வரும் 2021-ஆம் ஆண்டை என்னுடைய குழந்தைகளுடன் வரவேற்கிறேன், நான் குற்றவாளி அல்ல, எனக்கு பின்னால் நின்று, என்னை நம்பிய அனைவருக்கும் நன்றி, இந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்க்கையில் கடினமான நாட்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், இதைக் கண்ட இணையவாசிகள் பலரும் அவரை ஒரு மோசமாக விமர்சித்தனர். இதனால் அவர் கடும் வேதனையில் இருப்பதாகவும், என் குழந்தைகள் தான் எனக்கு உலகம், ஒரு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டேன், மக்கள் அதை மதிக்க வேண்டும், உண்மையை புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தன்னுடைய வீட்டிற்கு அருகில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை அழைத்து, அவர்களுக்கு குளிர்பானம் தருவது போன்று, அதில் ஒரு சிறுவனிடம் உடல் அளவில் நெருக்கமாக இருந்துள்ளார்.
ஆனால், அந்த சிறுவனுக்கு அப்போது வெறும் 14 வயது, இது குற்றம், இருப்பினும் சிறுவனுக்கு தான் 16 வயது என நினைத்ததாக கூறி, அதற்கான ஆதாரங்கள் சிலவற்றை Teah Vincent கூறியுள்ளார். சிறுவன் அந்தளவில் நெருக்கமாக இருந்த போது கூட என்னிடம் வயதைப் பற்றி கூறவில்லை என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு சிறுவனைப் பற்றிய பெயர்கள், புகைப்படங்கள் எதுவும் வெளியாகவில்லை, அதுமட்டுமின்றி குறித்த சிறுவன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், தனக்கு 16 வயது என்பது போன்று குறிப்பிட்டுள்ளான்.
ஆனால், இதற்கு முன்பு சிறுவனை Teah Vincent பார்த்ததில்லை, இருந்த போதிலும், சிறுவன் பேஸ்புக் பயன்பாட்டிற்காக நான் என்னுடைய பிறந்த திகதியை மாற்றி போட்டதாக குறிப்பிட்டுள்ளான்.
இதையடுத்து, Teah Vincent விடுவிக்கப்பட்டிருந்தாலும், இணையவாசிகள் அவரை மோசமாக விமர்சித்து வருவது, அவருக்கு கடும் வேதனையாக இருப்பதுடன், இது என் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டதாக வேதனையுடன் கூறியுள்ளார்.