கேகாலை – ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் தற்போது சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹெட்டிமுல்ல பிரதேசத்தில் உள்ள ஆயுர்வேத மருத்துவர் ஒருவரால் இன்று கொரோனா ஒழிப்பு பாணம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிவிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மருத்துவரின் இல்லத்திற்கு முன்பாக கூடியுள்ளனர்.
இதனையடுத்து சமூக இடைவெளியின்மை காரணமாக மக்களைக் கட்டுப்படுத்த பொலிஸாரும் அங்கு விரைந்திருப்பதாக அறியமுடிகின்றது.



















