சுகாதார நடவடிக்கைகளால் மட்டுமே கொரோனா தொற்றின் புதிய எழுச்சியைத் தடுக்க முடியும், தடுப்பூசிகளால் முடியாது என உலக சுகாதார அமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் முதல் தடுப்பூசிகள் வழங்கப்படுவதால் உலக சுகாதார அமைப்பைச் சேர்ந்த டாக்டர் Margaret Harris இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகள் ஒரு சிறந்த கருவி, அவை மிகவும் உதவியாக இருக்கும்.
ஆனால், தடுப்பூசிகள் கொரோனாவுக்கு எதிராக ஒருவித நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்க இன்னும் பல நாட்கள் உள்ளது என டாக்டர் Margaret Harris கூறினார்.
கொரோனாவின் அதிகரிப்பு அல்லது எழுச்சியை சுகாதார நடவடிக்கைகளின் மூலம் மட்டுமே தடுக்க முடியும் என Margaret Harris கூறினார்.



















