இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மகன் கலையமுதனும், மாமனிதர் ரவிராஜின் மகள் பிரவீனா ஆகியோர் இன்று திருமண பந்தத்தில் இணைகின்றனர்.
கலையமுதன்- பிரவீனா திருமணம் குறித்து முதன்முதலில் தமிழ் பக்கம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த ஜோடியை பலர் வாழ்த்தினார்கள். சிலர் காலைவாரிவிட முயன்றார்கள். அதிலும் குறிப்பாக தமிழ் அரசு கட்சி எம்.பியொருவரின் அள்ளக்கைகளே அனாமதேய மின்னஞ்சல்களையெல்லாம் தமிழ்பக்கம் உள்ளிட்ட ஊடகங்களிற்கு அனு்பினார்கள். இல்லாத பொல்லாத கற்பனை கதைகளையெல்லாம் அதில் அவிழ்த்து விட்டார்கள்.
திருமதி சசிகலாவிற்கும் அதை அனுப்பியிருக்கிறார்கள். “அப்படியா தம்பி… வீட்டில் பிள்ளை குட்டிகள் இருக்கிறார்களா? போய் அவற்றை படிக்க வைக்கும் பிரயோசனமான அலுவல்களை பாருங்கள்“ என்ற சாரப்பட ஒரு மின்னஞ்சலை அனுப்பி வைக்க, எம்.பியின் அடியாட்கள் அந்த வேலையையே வெறுத்துப் போய் விட்டுவிட்டார்கள்.
கலையமுதன்- பிரவீனா ஜோடி காதலித்து, பெற்றோரின் சம்மதத்துடன் இன்று திருமண பந்தத்தில் இணைகிறார்கள். இன்று பதிவுத் திருமணம்
மாவை சேனாதிராசாவின் இல்லத்திலேயே மாலை 7 மணிக்கு நடக்கிறது.
தற்போதைய பெருந்தொற்று காலத்தில் சுகாதார நடைமுறைகளின்படி, இரு வீட்டாரும், நெருங்கிய உறவினர்களும் மட்டும் கலந்து கொள்ளும் திருமணம்.