11 வயதான பாடாலை மாணவியொருவர் கர்ப்பவதியாக இருக்கும் அதிர்ச்சி சம்பவம் மொனராகலையில் இடம்பெற்றுள்ளது.
படல்கும்புர பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. சிறுமியின் கர்ப்பத்திற்கு காரணமான, மாமா கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக வயிற்றுவலி, அசாதாரண தோற்றம் போன்றவற்றால் சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர் பெற்றோர். பரிசோதனையில் சிறுமி கர்ப்பவதியாக இருப்பது தெரிய வந்தது.
சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாமா தன்னை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியதை தெரிவித்துள்ளார். இதையடுத்து மாமா கைது செய்யப்பட்டார்.



















