பிரித்தானியாவில் இப்போது தலைநகர் லண்டனில் கொரோனா தொற்று விகிதம் அதிகரித்து வருவதாக புள்ளி விவரம் வெளியாகியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, பிரித்தானியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி திட்டம் இந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் படி இந்த நோயால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு இந்த தடுப்பூசி முதலில் போடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தேசிய புள்ளிவிவரங்களுக்கான அலுவலகம் வாராந்திர கண்காணிப்பு கணக்கெடுப்பின்படி, நவம்பர் 30-ஆம் திகதி முதல் டிசம்பர் 6-ஆம் திகதி வரை லண்டனில் 100,000 பேருக்கு 191.8 கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், இதற்கு முன் வாரம் 100,000-க்கு 158.1 ஆக இருந்தது, தற்போது அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போன்று, பொது சுகாதார இங்கிலாந்தின் சமீபத்திய தரவுப் படி, நகரத்தின் 32 பெருநகரங்களில் 24-ல் கொரோனா வழக்குகள் அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
இங்கிலாந்தின் இரண்டு பகுதிகளிலும் நோய்த்தொற்று விகிதம் உயர்ந்துள்ளது. கிழக்கில் 116.2-ஆக இருந்தத், தற்போது 147.2 ஆகவும், தென்கிழக்கில் 142.2 முதல் 160.8 ஆகவும் அதிகரித்துள்ளது.
இருப்பினும், நாட்டின் ஒவ்வொரு பிராந்தியமும் வாரத்திற்கு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் மிகப்பெரிய வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது.
அதாவது 100,000-பேரில் 196.8-ஆக இருந்தது, 158.4-ஆக குறைந்துள்ளது. இதற்கிடையில், தென்மேற்கு இங்கிலாந்தின் மிகக் குறைந்த விகிதம் 77.3 – 91.2 ஆக இருந்தது.
சுகாதார நிபுணர்கள், கிறிஸ்துமஸ் காலத்திற்குள், லண்டன் உடனடியாக மூன்றாவது அடுக்கு கட்டுப்பாடுகளுக்குள் செல்ல வேண்டும், அல்லது பயங்கரமான ஒரு நிலையை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கப்பட்ட நிலையில், இந்த புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது.




















