பிக்பாஸ் வீட்டுக்குள் குரூப்பிஸம் இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போலத்தான். நேற்று இது பட்டவர்த்தனமாக தெரிய வந்தது. நிஷா, அனிதா இருவரும் ஒரே விஷயத்தை தான் செய்தனர். ஆனால் நிஷா சிறந்த பெர்பார்மராக தேர்வு செய்யப்பட்டார். அனிதா ஒர்ஸ்ட் பெர்பார்மராக தேர்வு செய்யப்பட்டு ரமேஷுடன் ஜெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
தன்னை மோசமான பெர்பாமராக தேர்வு செய்து ஜெயிலுக்கு அனுப்பியதை அனிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதையடுத்து அவர் கேள்வி கேட்க அது ரியோ, நிஷா என பலரையும் விளக்கம் அளிக்க வைத்தது.
நிஷா எல்லாரும் சொன்னதை மீறி அப்பா பத்தி பேசுனாங்க. ஆனா அவங்கள பெஸ்ட் பர்பாமர்னு சொல்றீங்க? என கேட்டார். தொடர்ந்து வெளியில் வந்த அனிதா, ரம்யாவிடம் குக்கிங் யாருமே இல்லாம நான் மட்டும் தான் செஞ்சேன்.
அப்போ யாரும் ஒண்ணும் சொல்லல. வாங்கன்னு சொல்லி இருந்தா வந்து விளையாடி இருப்பேன். அப்படி தனியா கஷ்டப்பட்டுட்டு இப்போ ஜெயிலுக்கு போகணுமா? என சொல்ல ரம்யா அவருக்கு ஆறுதல் கூறினார்.
இதையடுத்து அனிதா வீட்டின் முன் நின்று ஷோவுல இருந்து என்ன தூக்கணும். அதுதான் உங்க பிளான். நீங்க குரூப்பா போய் பைனல்ஸ்ல உட்கார்ந்துருவீங்க. அது தான் உங்களோட பிளான். சனமை இப்படிதான் வெளியே அனுப்பி வச்சீங்க.
அடுத்து என்னை தூக்க பிளான் பண்றீங்க. தனியா விளையாடுற எல்லாரையும் தூக்கிடணும் என சத்தம் போட்டு பேசினார். அனிதா இப்படி பேசும்போது கேமரா சின்சியராக சமைத்து கொண்டிருந்த ரியோவை குளோஸ் அப்பில் காட்டியது.
அனிதாவின் இந்த பேச்சும், ஆதங்கமும் அவருக்கு ஏராளமான ரசிகர்களை தந்துள்ளது போல. இந்த வாரம் கமல் இதை தட்டிக் கேட்கணும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால் அனிதா இந்தியளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்து உள்ளார்.
Wow Anitha blasting rio today was on point! As irritating as she can be – she has been exposing this hypocrite group now so rightly at the right time! #BiggBossTamil #BiggBossTamil4 pic.twitter.com/f0GCbNtwJq
— Mithrav (@Vandhan24690421) December 10, 2020
Anitha Gethu #biggbosstamil4 pic.twitter.com/m1S0yhf6nU
— Amirtharaj Bharthy (@Amirtharaj666) December 10, 2020



















