விஜய் டி.வி.யில் ஒளிப்பரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்தவர் சித்ரா (29). இவர் கடந்த புதன்கிழமை அதிகாலை 02.30 மணிக்கு, ஈ.பி.பி ஃபிலிம் சிட்டியில் கடந்த செவ்வாய்கிழமை படபிடிப்பு முடித்துவிட்டு ஹோட்டல் ரூமிற்கு வந்துள்ள நிலையில் ,சித்ரா அறையிலுள்ள மின்விசிறியில் புடவை மூலம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து நடிகை சித்ராவை அவரது கணவரே தற்கொலைக்கு தூண்டியதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
பாண்டியன் ஸ்ரோஸ் நாடகத்தில் சமீப காலமாக கதிர் – சித்திரா ரொமான்ஸ் காட்சிகள் அதிகரித்த நிலையில், சித்ராவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவருடன் ஹேம்நாத் சண்டையிட்டது பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தின் காரணமாகவும் அதனால் நிகழ்ந்த சண்டைகள் காரணமாகவும் சித்ரா அணுவணுவாய் உளவியல் ரீதியில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் ஹேம்நாத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.




















