நாட்டில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்கியதிலிருந்து கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் பதிவுசெய்யப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 15 ஆயிரத்தையும் கடந்துள்ளது.
நேற்றைய தினம் நாட்டில் பதிவான 616 புதிய கொரோனா நோயாளர்களில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 266 பேர் பதிவாகியுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் கொழும்பில் மொத்தம் 15,123 வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நாட்டில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 34,737 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான 25,652 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் 8,925 பேர் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் கொரோனா தொற்று சந்கேதத்தில் 499 பேர் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளதுடன், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் மூன்று நோயாளர்களின் மரணம் இடம்பெற்றிருப்பதாக நேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இலங்கையில் உயிரிழந்த கொவிட் – 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 160 ஆகும்.
01. கொலன்னாவை பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதான பெண். கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர் 14ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் கொவிட் நிமோனியா நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது. (மரணம் பதிவான திகதி 2020 டிசம்பர்; 15.)
02. கொழும்பு 09 பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான ஆண் நபர். கொழும்பு ஐனுர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் 2020 டிசம்பர் மாதம் 15ஆம் திகதி உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் இரத்தம் நஞ்சானமை உறுப்புக்கள் செயல் இழப்பு மற்றும் கொவிட் நிமோனியா நிலை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. (மரணம் பதிவான திகதி 2020 டிசம்பர் 16)
03. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான பெண். பாணந்துறை ஆதார வைத்தியசாலையிலிருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அந்த வைத்தியசாலையில் 2020 டிசம்பர் 16ஆம் திகதி உயிரிழந்;துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா , இரத்தம் நஞ்சானமை மற்றும் பல உறுப்புக்கள் செயலிழப்பினால்; ஏற்பட்ட அதிர்ச்சி எனவும் தெரிவிகப்பட்டுள்ளது. (மரணம் பதிவான திகதி 2020 டிசம்பர் 16 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















