அடுத்த ஆண்டிலிருந்து புகலிடக் கோரிக்கையாளர்கள் முகாமில் மின்சாரமும் தண்ணீரும் இருக்காது என சர்ச்சைக்குரிய திட்டம் ஒன்றை பிரித்தானியா முன்வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களுக்காக மின்சாரமும் தண்ணீரும் இல்லாத பல முகாம்கள் பிரித்தானியாவில் அமைக்கப்பட இருப்பது குறித்த ஒரு பிரச்சினையை, முன்னாள் புலம்பெயர்தல் துறை அமைச்சரான Caroline Nokes நாடாளுமன்ற விவாதத்தின்போது வெளிக்கொணர்ந்துள்ளார்.
ஆனால், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு அரசு கொடுத்துள்ள இடம் நியாயமானதாகவும் நல்லதாகவும் இருப்பதாக தெரிவித்துள்ள உள்துறை அலுவலக அமைச்சரான Chris Philp, நாம் தற்போது 60,000 பேருக்கு உறைவிடம் கொடுத்துள்ளோம் என்றார்.
இந்த மாற்றங்கள் Dublin regulation என்னும் ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்குப் பின் பிரித்தானியாவில் நிகழ இருக்கும் மாற்றங்களை எதிர்கொள்வதற்காக செய்யப்படுகின்றன என்றார்.
தேவையற்ற மற்றும் அபாயமான பயணங்களை மக்கள் மேற்கொள்வதிலிருந்து மக்களை தடுப்பதற்காகத்தான் இவை செய்யப்படுகின்றன.
குறிப்பாக, உயிருக்கு அபாயம் ஏற்படுத்தும் வகையில் ஆங்கிலக்கால்வாயை கடப்பதையும், மக்களை கடத்தும் குற்றவாளிகளையும் தடுப்பதற்காகத்தான் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன என்கிறார் அவர்.
ஏற்கனவே பாதுகாப்பான நாடு ஒன்றில் புகலிடம் கோர வாய்ப்பிருந்தவர்கள், பிரித்தானியாவில் வந்து புகலிடம் கோர முயற்சிக்கும் நிலையில், அவர்களை அந்த நாட்டுக்கே பாதுகாப்பாக அனுப்பி வைக்க இந்த மாற்றங்கள் உதவும் என்கிறார் Philp.
பாதுகாப்பான ஒரு நாட்டில் இருப்பவர்கள், ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான ஒரு பயணத்தை மேற்கொண்டு பிரித்தானியாவுக்கு வரவேண்டாம் என்னும் செய்தியை இந்த நடவடிக்கை அவர்களுக்கு தெரிவிக்கும் என்கிறார் அவர்.