சிலாபம் வென்னப்புவை பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த பிரதேச சபை உறுப்பினர் நிதி மோசடி சம்பந்தமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலையாகி இருந்தார்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.