ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஒரு வருட ஆட்சிக்காலம் தோல்வி என சிலர் கூறினாலும் அவரை ஆட்சிக்கு கொண்டு வந்த சிங்கள பௌத்த நிலைப்பாடே தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை தொகுதி அமைப்பாளரும், மாத்தறை மாநகர சபையின் முன்னாள் மேயர் உபுல் நிஷாந்த ஏற்பாடு செய்திருந்த மாத்தறை சமூகம் என்ற தலைப்பிலான கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு தனி சிங்கள பௌத்த அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என்ற தேவை இருந்தது. இதற்காக மிகப் பெரிய வெற்றியை பெற்றுக்கொடுத்தனர். எனினும் இந்த நிலைப்பாட்டின் நோக்கத்தின் தோல்வி ஒரு வருடத்திற்கு ஒப்புவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை எதிர்க்கட்சியை சேர்ந்த சிலர் கோட்டாபய ராஜபக்சவை விடசிங்கள பௌத்தர்களாக மாற முயற்சித்து வருகின்றனர். எனினும் இந்த நாட்டிற்கு தாராளமய ஜனநாயகமே தேவை. அத்துடன் நாட்டுக்கு ஐக்கிய தேசியக் கட்சி தேவை எனவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.



















