இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள Dragonfly பப்பில் நடந்த சோதனைக்கு பின்னர் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் பாடகர் குரு ரந்தவா ஆகியோர் கைது செய்யப்பட்டனர் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
விமான நிலையத்திற்கு அருகிலுள்ள Dragonfly பப்பில் நடந்த சோதனையில், பப்பின் ஏழு ஊழியர்கள் உட்பட மொத்தம் 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
கொரோனா விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட 34 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து SR Pi Sahar காவல்நிலையம் அளித்த தகவலின் படி, Dragonfly கிளப்பில் நடந்த சோதனையில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டில் கைது செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யப்பட்ட 34 பேரில் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா மற்றும் பாடகர் குரு ரந்தவா ஆகியோரும் அடங்குவர்.
பின்னர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என தெரிவித்துள்ளது.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உட்பட 34 பேர் மீது ஐபிசி பிரிவு 188, 269, 34 மற்றும் என்எம்டிஏ விதிகள் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
Dragonfly நிறுவனம், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு பின்னரும் திறந்த நிலையில் வைத்திருந்ததற்கும், கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றாததற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா 2020 ஆகஸ்ட் 15ம் தேதி அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.