நேற்றும் மேலும் பலருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிறைச்சாலைகளில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சிறைச்சாலை கொத்தணியில் நேற்று மேலும் 40 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து இதுவரையான தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 949 ஆக அதிகரித்துள்ளது என சிறைச்சாலைகள் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
ஆண் கைதிகள் 37 பேரும் பெண் கைதிகள் மூவருமாக நேற்று 40 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மொத்தத் தொற்றாளர்களில் வெலிக்கடை சிறைச்சாலையில் 846 பேருக்கும், மகசின் சிறைச்சாலையில் 830 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.