ஹல்தும்முல்ல வால்ஹாபுதென்ன மஹா வாங்குவ பகுதியில் 200அடி பள்ளத்தில் வாகனமொன்று விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்தனர்.
நேற்று இரவு விபத்து நடந்தது.
ஹப்புத்தளையில் இருந்து பலாங்கொட நோக்கி சென்ற வாகனமே விபத்திற்குள்ளானது.
200 அடி செங்குத்துப்பாதையில் விழுந்ததில் 8 குழந்தைகள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். அவர்கள் ஹல்தம்முல்ல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் தியதலாவ ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக ஹல்தம்முல்ல பொலிசார் தெரிவித்தனர்.
பலாங்கொட பகுதியில் வசிக்கும் ஒரு குழு ஹப்புத்தளையில் உள்ள லிப்டன்பகுதிக்கு சென்றுவிட்ட, திரும்பி வந்தபோது இந்த விபத்தை சந்தித்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில் மூன்று பெண்கள், மூன்று ஆண்கள் மற்றும் எட்டு சிறியவர்கள் உள்ளனர்.
காயமடைந்தவர்களை மீட்டு பிரதான வீதிக்கு கொண்டு செல்ல அப்பகுதியிலுள்ள மக்கள் ஹல்தும்முல்ல பொலிசாருடன் கடுமையாக உழைத்தனர்.