வௌிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட அனைத்து வணிக விமானங்களுக்காக ஜனவரி 22 ஆம் திகதி தொடக்கம் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரதம் தொடர்பில் அவதானம் செலுத்தி சுகாதார பிரிவுகளின் விசேட கண்காணிப்பின் கீழ் விமான நிலையங்களை திறக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஜனவரி 22 ஆம் திகதியின் பின்னர் நாட்டிற்கு வருவதற்கு அனைத்து வர்த்தக விமானங்களுக்கும் சந்தர்ப்பம் வழங்க நாம் எதிர்ப்பார்த்துள்ளோம். பாதுகாப்பு முறைமைகளை கடைப்பிடித்து நாட்டை திறக்க வேண்டும்”. என்றார்.