பலூசிஸ்தானின் மாக் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை குறைந்தது 11 நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். ஆயுதமேந்திய நபர்கள் அவர்களைக் கடத்தி அருகிலுள்ள பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.
சுரங்கத் தொழிலாளர்கள் வேலைக்குச் சென்று கொண்டிருந்தபேது, ஆயுததாரிகள் அவர்களைக் கடத்திச் சென்று அருகிலுள்ள மலைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆயுதாரிகளின் துப்பாக்கிச் சூட்டில் சுரங்கத் தொழிலாளர்கள் 6 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், படுகாயமடைந்த 5 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்துள்ளனர்.
கொல்லப்பட்ட சுரங்கத் தொழிலாளர்களை ஷியா ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) குழு தனது டெலிகிராம் தகவல் தொடர்பு ஊடகமான அமக் செய்தி நிறுவனம் மூலம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரு நாடுகளிலும் தலிபான் மற்றும் ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் பிற போராளி குழுக்களால் ஹசாராக்கள் அடிக்கடி குறிவைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தாக்குதலைத் தொடர்ந்து, குவெட்டாவில் உள்ள ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தமது எதிர்ப்புத் தெரிவித்து டயர்களுக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டசுரங்கத் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதை பிரதமர் இம்ரான் கான் கண்டித்து, “பயங்கரவாதத்தின் மற்றொரு கோழைத்தனமான மனிதாபிமானமற்ற செயல்” என்று குறிப்பிட்டார்.
“இந்த கொலையாளிகளைக் கைதுசெய்து நீதிக்கு கொண்டு வர அனைத்து வளங்களையும் பயன்படுத்துமாறு எஃப்சியிடம் கேட்டுக் கொண்டேன். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அரசாங்கத்தால் கைவிடப்படாது” என்று அவர் ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.