அண்மையில் யாழ். பல்கலையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் எதிரொலியாக கலைப்பீட மாணவர்கள் சிலருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டது.
இதன் பின் இப்பிரச்சினையினை ஆராய நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு வழங்கிய தீர்மானத்தின் படி இவர்களின் தண்டனை உறுதியானது.
தமது தண்டனையை நீக்குமாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் பல வகையில் கோரிக்கை விடுத்தும் அவை பலனளிக்காத நிலையில், நேற்றையதினம் முதல் உணவு ஒறுப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்வாறு இரவு – பகலாய் போராட்டத்தில் ஈடுபட்டு, அனாதைகளாய் வீதியோரத்தில் உறங்கும் மாணவர்களின் அவல நிலையே இது,