யாழ். மாநகர சபையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுத்த முடிவின் காரணமாக ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்கவில்லை என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
நடந்து முடிந்த யாழ். மாநகர சபையின் மேயர் தெரிவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்ட இம்மானுவேல் ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைக்கும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமைக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறுஞ்செய்தி மூலம் ஆதரவு கோரியிருந்தார்.
எனினும் இதன்போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைமையும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எடுத்த முடிவின் காரணமாக ஆனோல்ட்டுக்கு ஆதரவு வழங்கவில்லை என்றார்.