இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மூலம் உலகவும் முழுவதும் பரவும் புதிய கொரோனா வைரஸ் இலங்கைக்குள் நுழையும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
எனவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும். அதனுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகளையும் சுகாதார அமைச்சு கண்காணிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளளது.
தங்கள் தனிமைப்படுத்தல் காலப்பகுதியினுள் இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணிகள் நாட்டினுள் பயணிப்பதே இந்த அவதானமிக்க நிலைமைக்கு காரணம் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர ரெிவித்துள்ளார்.
சுற்றுலா பயணிகளுடன் தொடர்புபடுகின்ற அனைவரும் சுகாதார வழிக்காட்டல்களை உரிய முறையில் பின்பற்றுவது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில் மூடப்பட்டிருந்த விமான நிலையம் கடந்த 28ஆம் திகதி சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டது.
அதன் கீழ் யுக்ரேன் நாட்டவர்கள் உட்பட 500 சுற்றுலா பயணிகளுக்கும் அதிகமானோர் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளனர்.
இவர்களுக்குள் பலர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் இந்த ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.