• Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us
LankaSee
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு
No Result
View All Result
LankaSee
No Result
View All Result
Home செய்திகள் இந்தியச் செய்திகள்

இலங்கை அரசின் கைக்கூலியாகச் செயல்படும் பேஸ்புக்; வைகோ கண்டனம்

Editor by Editor
January 15, 2021
in இந்தியச் செய்திகள், இலங்கைச் செய்திகள்
0
இலங்கை அரசின் கைக்கூலியாகச் செயல்படும் பேஸ்புக்; வைகோ கண்டனம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழர்களின் இனப்படுகொலை, பிரபாகரன் படம் போன்றவற்றைப் பதிவு செய்தால் முகநூல் கணக்குகளை முடக்கி தமிழர் இன உணர்வை அடக்க முயல்கிறது முகநூல். ஆனால், கோடிக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்ற ஹிட்லர், காந்தியைக் கொன்ற கோட்சே, ஈழப் படுகொலைக்குக் காரணமான ராஜபக்‌ச படங்களைப் பகிர்பவர்களுக்குத் தடை இல்லை என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கை:

”நவம்பர் 26ஆம் நாள், தமிழ் ஈழ தேசியத் தலைவர் பிரபாகரன் பிறந்த நாள். அதை ஒட்டி, அவரது படத்தை முகநூல் தளத்தில் பகிர்ந்த அனைவரையும், முகநூல் தளம், ஒரு நாள் முதல், ஒரு வாரம், ஒரு மாதம் என்ற கணக்கில் முடக்கி வைத்தது. அந்த நாளில், ஆதரவு அற்ற, வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகள் இல்லம் சென்று உணவு அளித்ததை நேரடியாக ஒளிபரப்பியவர், அடுத்த 60 நாள்களுக்கு, நேரடி ஒளிபரப்பு செய்யத் தடை விதித்து இருக்கின்றனர். இவை எல்லாம், பயங்கரவாத நடவடிக்கைகள் என, முகநூல் முத்திரை குத்துகின்றது.

ஆனால், 60 லட்சம் யூதர்களைக் கொன்றதற்காக, இனப்படுகொலையாளன் என முத்திரை குத்தப்பட்டவரும், இரண்டாம் உலகப் போரின் விளைவாக 2.5 கோடி பேர் சாவுக்குக் காரணம் ஆனவரும், பல கோடிப் பேர் கை, கால்களை இழக்கவும் காரணமாக இருந்த ஹிட்லர் படத்தை, முகநூல் தளத்தில் பரப்புவதற்கு எந்தத் தடையும் இல்லை. அதுபோலவே, இரண்டாம் உலகப் போர்க் குற்றவாளிகளைப் பற்றிய அனைத்துச் செய்திகளும், முகநூல் தளங்களில் விரிவாகக் காணக் கிடைக்கின்றன.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த ராஜபக்ச படத்தைப் பகிர எந்தத் தடையும் இல்லை. காந்தியைக் கொன்ற கோட்சே படத்தைப் போட்டு, ஆர்எஸ்எஸ் சங் பரிவார் கும்பல் சூட்டுகின்ற புகழாரங்களுக்குத் தடை இல்லை. ஆனால், பிரபாகரன் படத்தைப் பகிர்ந்தால் முடக்குகின்றது முகநூல். அவ்வாறு அவரது படத்திற்கு, உலகில் இதுவரை எந்த நாடும் தடை விதித்தது இல்லை. ஆனால், முகநூல் மட்டும் தடை செய்கின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு இருந்த, முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னத்தை, சிங்கள இனவெறி ராணுவம் இரவோடு இரவாக இடித்துத் தகர்த்துத் தரைமட்டம் ஆக்கியதைக் கண்டித்து, சென்னையில் உள்ள சிங்கள இனவெறி துணைத் தூதரகத்தின் முன்பு, மதிமுக மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் சார்பில் 11.1.2021 திங்கட்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், தலைவர்கள் கலந்துகொண்டு கருத்துரை ஆற்றினர்; கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

அந்த ஆர்ப்பாட்டத்தில் நான் ஆற்றிய உரையை, சமூக வலைதளங்களில் பகிர்ந்ததற்காக, பலரது முகநூல் கணக்குகளை, அந்தத் தளம் முடக்கி இருக்கின்றது. சிங்கள இனவெறி அரசின் கைக்கூலி ஆகி இருக்கின்ற முகநூல், உலகம் முழுமையும் வாழ்கின்ற பத்துக் கோடித் தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வருகின்றது.

சிங்கள இனவெறித் துணைத் தூதரகத்தைக் கண்டித்து, தமிழகத்தின் எதிர்க்கட்சிகள் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டத்தை, பயங்கரவாத நடவடிக்கை என முத்திரை குத்தி, மக்கள் பார்வையில் இருந்து மறைக்க முயல்கிறது. தமிழ் இனப்படுகொலையை மறைக்கத் துணை போகின்றது.

சமூக வலைதளங்களுள், உலக அளவில் முதல் இடத்தைப் பெற்று இருக்கின்ற முகநூல் (facebook) நிறுவனத்தின் போக்கு, தான்தோன்றித் தனமாக ஆகி வருகின்றது. தாங்கள் வைத்ததே சட்டம், யாரும் கேள்வி கேட்கக் கூடாது என்ற இறுமாப்பும், ஆணவமும், அவர்களுடைய நடவடிக்கைகளில் வெளிப்படுகின்றன. முகநூலின் இந்தத் தான்தோன்றித்தனமான போக்கு நீடிக்குமானால், உலக நாடுகளின் இறையாண்மை கேள்விக்குறியாகி விடும்.

நாடுகளில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசுகள் இயற்றுகின்ற சட்டங்களை மதிப்பது இல்லை என, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முகநூல் மீது குற்றம் சாட்டி வருகின்றனர். பல நாடுகளில் முகநூல் தளத்திற்குப் பல கட்டுப்பாடுகளையும், பல கோடி ரூபாய் தண்டமும் விதித்து இருக்கின்றார்கள்.

எனவே, ஒவ்வொரு நாட்டிலும், தாங்கள் விரும்பியவாறு அரசுகள் அமைய வேண்டும் என்பதற்காக, முகநூல் தளம் முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், முகநூல் தளத்தின் இந்திய உயர் அதிகாரி அங்கி தாஸ், ஊழியர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில், பாஜகவுக்கு ஆதரவாக வேலை செய்தது, வெட்ட வெளிச்சம் ஆனது. கண்டனைக் கணைகள் பாய்ந்தன. எனவே, வேறு வழி இன்றி அவரைப் பதவி நீக்கம் செய்தது.

இந்திய நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு அழைத்தபோது, முகநூலின் இந்திய அதிகாரிகள், விசாரணைக்கு வர மறுத்தனர். இவர்கள், தங்களுடைய சர்வர்களை, இந்தியாவில் நிறுவவும் இல்லை; இந்தியச் சட்டங்களை மதிப்பதும் இல்லை. உலக அளவில் பல செய்தி நிறுவனங்களின் உழைப்பைச் சுரண்டிக் கொழுக்கின்ற முகநூல் தளம், அவர்களுக்கு உரிய பங்கைத் தருவதும் இல்லை.

தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிரான வகையில் முகநூல் செயல்பட்டு வருகின்றது. தமிழகத் தலைவர்களைக் களங்கப்படுத்த முயல்கின்றது; அவர்களது கருத்துகளைத் திரைபோட்டு மறைக்கின்றது.

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள இனவெறி அரசின் இனப்படுகொலைக்கு ஆதரவாக முகநூல் தளம் இயங்கி வருகின்றது. உலகம் முழுமையும் பரவி வாழ்கின்ற ஈழத் தமிழர்களை, பயங்கரவாதிகள் என முத்திரை குத்துகின்றது.

எனவே, முகநூல் அதிகாரிகளை நேரில் அழைத்து எச்சரிக்கை செய்ய வேண்டும் என்றும், முகநூலின் தான்தோன்றித்தனமான போக்கைத் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன். குறிப்பாக, தமிழக சட்டப்பேரவைக்கு இத்தகைய அதிகாரம் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

வெற்று இடத்தைக் காற்று நிரப்பியே தீரும்; முகநூலுக்கு மாற்றுத் தளம் உருவாகியே தீரும்”. இவ்வாறு வைகோ எச்சரித்துள்ளார்.

Previous Post

சுவிட்சர்லாந்தில் அமுலுக்கு வரும் புதிய கடுமையான கட்டுப்பாடுகள்

Next Post

பிரபாகரன் போராடி மரணித்திருப்பாரே தவிர, கோட்டாவின் நாய் கதைக்கு வாய்ப்பேயில்லை….

Editor

Editor

Related Posts

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
இலங்கைச் செய்திகள்

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து
இலங்கைச் செய்திகள்

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு
இலங்கைச் செய்திகள்

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இலங்கைச் செய்திகள்

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025
‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்
இலங்கைச் செய்திகள்

‘கெஹெல்பத்தர பத்மே’ வழங்கிய மற்றுமொரு தகவல்

December 17, 2025
இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!
இலங்கைச் செய்திகள்

இலங்கையில் இருந்து துருக்கி நோக்கி புறப்பட்ட விமானத்தில் தொழிநுட்ப கோளாறு!

December 17, 2025
Next Post
பிரபாகரன் போராடி மரணித்திருப்பாரே தவிர, கோட்டாவின் நாய் கதைக்கு வாய்ப்பேயில்லை….

பிரபாகரன் போராடி மரணித்திருப்பாரே தவிர, கோட்டாவின் நாய் கதைக்கு வாய்ப்பேயில்லை....

FB Page

LankaSee
  • Trending
  • Comments
  • Latest
அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை புதிய பட்டதாரி ஆசிரியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

June 3, 2024
உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

உயர்தரப் பெறுபேற்றினால் விபரீத முடிவெடுத்த மாணவன்!

June 3, 2024
அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

அஸ்வெசும நலன்புரித் திட்ட இரண்டாம் கட்ட விண்ணப்பங்கள் கோரல்!

June 5, 2024
முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

முல்லைத்தீவு பாடசாலையொன்றின் பரீட்சை முடிவுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

June 6, 2024
வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

வியாழேந்திரன் எம்.பியின் ஆதரவாளர்கள் பெரும் அட்டகாசம்!

0
அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

அரசாங்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கடுமையான எச்சரிக்கை!

0
ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

ராஜிதவின் கைது விவகாரத்தில் அரசியல் தலையீடுகள் இல்லை!

0
தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

தேசிய காவல்துறை ஆணைக்குழுவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை!

0
காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

காட்டில் கொடூர கொலை ; கை, கால்கள் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

December 18, 2025
தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

தென்னிலங்கையை உலுக்கிய சோகம் – அரசாங்க வைத்தியசாலையில் யுவதிக்கு எமனாக மாறிய மருந்து

December 18, 2025
முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

முல்லைத்தீவில் 3 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா மீட்பு

December 18, 2025
இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இளங்குமரன் எம்.பிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

December 18, 2025

Recent News

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Navigate Site

  • Home
  • About Us
  • Privacy Policy
  • Terms of Use
  • Contact Us

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கைச் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • வன்னி
      • திருகோணமலை
      • மட்டக்களப்பு
      • அம்பாறை
      • மலையகம்
    • இந்தியச் செய்திகள்
      • தமிழகம்
    • உலகச் செய்திகள்
      • சுவிஸ் செய்திகள்
      • பிரித்தானிய செய்திகள்
      • பிரான்ஸ் செய்திகள்
      • ஜேர்மனி செய்திகள்
      • கனடா செய்திகள்
      • அவுஸ்திரேலிய செய்திகள்
    • விளையாட்டுச் செய்திகள்
      • கிரிக்கெட்
      • காற்பந்து
      • டென்னிஸ்
  • அறிவியல்
  • ஆரோக்கியம்
  • கலையுலகம்
    • சினிமா செய்திகள்
    • திரை விமர்சனம்
  • சோதிடம்
  • வினோதம்
  • தொடர்பு

Copyrights © 2022 Lankasee . All rights reserved.

Terms and Conditions - Privacy Policy