சுவிட்சர்லாந்து திங்கட்கிழமை முதல் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சுவிஸ் அரசாங்கம், ஏற்கனவே இருக்கும் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடல் ஆகிய கட்டுப்பாடுகளை பிப்ரவரி மாத இறுதிவரை நீட்டிக்கும் என்று மட்டுமே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று புதிதாக, வீட்டிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயம், அடிப்படை மளிகைப் பொருட்களை விற்கும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடுதல் ஆகிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்வது குறித்து அறிவித்துள்ளது அரசு.
ஏற்கனவே கொரோனா மிக அதிக அளவில் உள்ளது, அதுபோக, புது வகை கொரோனா அதிகரிக்கும் அபாயம் வேறு உள்ளது என அரசு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட பதற்றமான ஒரு சூழலில், ஏற்கனவே அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீட்டிப்பதுடன் நின்றுவிடாமல், புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது என முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, வரும் திங்கட்கிழமை முதல், வீட்டிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயமாக்கப்படுகிறது, அன்றாடதேவைகளுக்குரிய பொருட்களை விற்காத கடைகள் மூடப்படும், மக்கள் கூடுகை தொடர்பில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளன, வேலை செய்யும் அபாய சூழலிலுள்ள மக்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.சுவிட்சர்லாந்து திங்கட்கிழமை முதல் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்ய இருக்கிறது.
சுவிஸ் அரசாங்கம், ஏற்கனவே இருக்கும் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் மூடல் ஆகிய கட்டுப்பாடுகளை பிப்ரவரி மாத இறுதிவரை நீட்டிக்கும் என்று மட்டுமே எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், நேற்று புதிதாக, வீட்டிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயம், அடிப்படை மளிகைப் பொருட்களை விற்கும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடுதல் ஆகிய கட்டுப்பாடுகளை அறிமுகம் செய்வது குறித்து அறிவித்துள்ளது அரசு.
ஏற்கனவே கொரோனா மிக அதிக அளவில் உள்ளது, அதுபோக, புது வகை கொரோனா அதிகரிக்கும் அபாயம் வேறு உள்ளது என அரசு அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட பதற்றமான ஒரு சூழலில், ஏற்கனவே அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீட்டிப்பதுடன் நின்றுவிடாமல், புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவது என முடிவு செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, வரும் திங்கட்கிழமை முதல், வீட்டிலிருந்து வேலை பார்ப்பது கட்டாயமாக்கப்படுகிறது, அன்றாடதேவைகளுக்குரிய பொருட்களை விற்காத கடைகள் மூடப்படும், மக்கள் கூடுகை தொடர்பில் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட உள்ளன, வேலை செய்யும் அபாய சூழலிலுள்ள மக்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.