இலங்கையில் நேற்று 755 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 59,922 ஆக உயர்ந்தது.
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில், 741 நபர்கள் பேலியகொட கோவிட் -19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். சிறைச்சாலைகளில் இருந்து 7 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
இஸ்ரேலில் இருந்து வந்த 7 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
நேற்று 709 நபர்கள் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,046 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 8,588 நபர்கள் COVID-19 க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதித்த சந்தேகத்தில்863 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.