தனது இளம் மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞனை விரட்டிச் சென்று கத்தியால் குத்திய நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நீர்கொழும்பு நீதிமன்றம் நேற்று (26) இந்த உத்தரவை பிறப்பித்தது.
கட்டான பகுதியை சேர்ந்த 49 வயதான இசைப்பொறியியலாளர் ஒருவரே, கட்டான பொலிசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
பிரபல இசைக்குழுவொன்றுடன் பணியாற்றும் அவர் திங்கள்கிழமை இசைநிகழ்ச்சியொன்றிற்கு சென்றுவிட்டு, இரவு 10 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது வீட்டில் வேறு நபர் இருப்பதை உணர்ந்த அவர், யன்னல் வழியாக உள்ளே அவதானித்த போது, தனது இளம் மனைவியுடன், இளைஞன் ஒருவர் தங்கியிருந்ததை அவதானித்தார்.
பிரதான வாயிலூடாக பொறியியலாளர் நுழைய, கள்ளக்காதலன் யன்னல் வழியாக குதித்து தப்பியோடினான். அவனை விரட்டிச் சென்று கத்தியால் குத்தியிருந்தார்.
20 வயதான இளைஞனே கத்திக்குத்திற்கு இலக்கானார்.