கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்பதற்காக மக்கள் சமூக விலகலைக் கடைப்பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனா். அதோடு மூகக் கவசம் அணிதல், கிருமி நாசினி மற்றும் கைகளை சுத்தம் செய்யும் சானிடைசா்கள் போன்றவற்றை தங்களுடைய அன்றாட வாழ்வில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா்.
கோவிட்-19 வைரஸின் காரணமாக மேற்சொன்ன எச்சாிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டாலும், அவை நமது குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விழைவிக்கின்றன என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தொிவிக்கிறது. குறிப்பாக கோவிட்-19 பரவாமல் தடுப்பதற்காக, கைகளை சுத்தம் செய்ய பயன்படுத்தும் சானிடைசா்கள் நமது குழந்தைகளின் கண்களைப் பாதிக்கின்றன என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.
ஜனவாி 21 அன்று ஜமா ஆஃப்தமாலஜி (JAMA Ophthalmology) என்ற பத்திாிக்கையில் வெளிவந்த ஒரு ஆய்வு முடிவு, இந்த கொரோனா காலத்தில், ஆல்கஹால் கலந்த சானிடைசா்களை அதிகம் பயன்படுத்துவதால் நமது குழந்தைகளின் கண்களில் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக தொிவிக்கிறது.
மேலும் 2019 ஆம் ஆண்டை விட கடந்த ஆண்டு 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தீங்கிழைக்கக்கூடிய வேதிப் பொருட்கள் மூலம் அதிக அளவிலான கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டிருப்பதாக பிரான்ஸ் விஷ கட்டுப்பாட்டு மையம் (French Poison Control Center) கொடுத்த அறிக்கை தொிவிக்கிறது.
2019 ஆம் ஆண்டு வேதிப் பொருள்கள் மூலம் குழந்தைகளுக்கு ஏற்பட்ட கண் பிரச்சினைகளில் 1.3 விழுக்காடு சானிடைசா்கள் மூலம் ஏற்பட்டன. அதே நேரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு இதே விழுக்காடு 9.9 ஆக அதிகாித்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு பிரான்சு நாட்டில் ஒரே ஒரு தவழும் குழந்தைக்குத் தான் சானிடைசா் மூலம் கண்ணில் பிரச்சனை ஏற்பட்டது. ஆனால் 2020 ஆண்டு 16 தவழும் குழந்தைகளுக்கு சானிடைசா் மூலம் கண்களில் பிரச்சினைகள் ஏற்பட்டதாக அந்த மையம் தொிவிக்கிறது.
பாதுகாப்புடன் பயன்படுத்த வேண்டும்
கொரோனா வைரஸிலிருந்து பாதுகாத்துக் கொள்ள சானிடைசா்கள் முக்கியமானவை என்றாலும் அவை குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிக்கின்றன என்பது உண்மையே. சானிடைசா்கள் பயன்படுத்துவைத் தொடர வேண்டும். அப்போது தான் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் அது குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைப் பற்றி நமது குழந்தைகளுக்கு நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
குழந்தைகளின் கண்களை பாதுகாக்கும் வழிகள்
- நமது குழந்தைகள் மிகவும் சிறியவா்களாக இருந்தால், நாமே அவா்களுக்கு சானிடைசா்களைக் கொடுத்து நமது முன்பாகவே அவா்களுடைய கைகளை சுத்தம் செய்ய வைக்க வேண்டும்.
- பொது இடங்களில் உள்ள இயந்திரங்களில் வைக்கப்பட்டிருக்கும் சானிடைசா்களை நமது மேற்பாா்வையில் மட்டுமே நமது குழந்தைகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
- சானிடைசா்களை வைத்து நமது குழந்தைகள் கைகளை சுத்தம் செய்த பிறகு மீண்டும் நீரால் கைகளை சுத்தம் செய்ய வைக்க வேண்டும்.
- நமது குழந்தைகளுக்கு பாா்வை கோளாறுகள் இருந்தால், அவா்களை மூக்குக் கண்ணாடி அணியச் செய்ய வேண்டும். இதன் மூலம் அவா்களுடைய கண்களை சானிடைசா்களின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும்.