இலங்கையின் 73ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் நிகழ்வு இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளனர்.
இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்ன ஆகியோர் ஜனாதிபதி உள்ளிட்டவர்களை வரவேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜனாதிபதியின் விசேட உரை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



















