பிரித்தானியாவில் நள்ளிரவில் நடந்த கார் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்து மூன்று பேர் காயமடைந்திருந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் Wiltshire-ல் இருக்கும் Westbury நகரில் நேற்று இரவு வெள்ளி நிறம் கொண்ட போர்டு பீஸ்டா ஒன்று தோட்ட சுவர் ஒன்றில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்து காரணமாக, 18 வயது மதிக்கத்தக்க இருக்கும் பெண் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டது. இது குறித்த தகவல் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்து வந்த பொலிசார், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது உயிரிழந்த பெண்ணின் பெயர் Bethany Ovenden Gumm எனவும் 18 வயது மதிக்கத்தக்கவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அந்த பெண்ணின் புகைப்படத்தை பொலிசார் முதல் முறையாக வெளியிட்டுள்ளனர்.
மேலும், இந்த விபத்து காரணமாக மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கார் விபத்து நேற்று சரியாக இரவு 11.40 மணிக்கு நடந்துள்ளது.
19 வயது மதிக்கத்தக்க ஆண் டிரைவர் பலத்த காயத்துடன் அங்கிருக்கும் சவுத் மீட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மீதமுள்ள இரண்டு பெண்கள் குறிப்பிட்டதக்க காயங்களுடன் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Bethany Ovenden Gumm தயார் தன்னுடைய பேஸ் புக் பதிவில், ஒரு மோசமான விபத்து ஏற்பட்டு, என் மகள் இறந்துவிட்டாள் என்று சோகமாக பதிவிட்டுள்ளார்.
Wiltshire காவல்துறையின் அதிகாரி ஆண்ட்ரூ லெமன் கூறுகையில், முதலில் Bethany Ovenden Gumm குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது உண்மையான இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன்.
இந்த துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது எவ்வளவு பேரழிவு தரும் என்பதை நாங்கள் முழுமையாக புரிந்துகொள்கிறோம்.
இது ஒரு கடினமான மற்றும் துன்பகரமான நேரம் என்று எங்களுக்குத் தெரியும், ஆனால் அனைவரையும் பாதுகாப்பாக வைத்திருக்க மக்கள் சமூக இடைவெளியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக தெரிவித்தார்.