சீனாவின் சர்வதேச விதிமீறல் நடவடிக்கைகளுக்கு அந்நாட்டை பெறுப்பேற்க செய்வோம் என்று அமெரிக்கா திட்டவட்டமாக கூறியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான அன்டோனி பிளிங்கன் சீன வெளியுறவு விவகாரங்கள் துறை இயக்குனர் யங் ஜெய்ச்சியுடன் தொலைபேசியில் பேசினார்.
இதையடுத்து, இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறுகையில்,
இரு அமைச்சர்கள் இடையே நடந்த பேச்சில் அமெரிக்கா தொடர்ந்து மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மாண்புகளை காக்கும் என அன்டோனி பிளிங்கன் தெரிவித்தார்.
அவர் சீனாவின் ஜின்ஜியாங்கில் உய்குர் இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறை திபெத்தில் நடக்கும் மனித உரிமை மீறல் ஹாங்காங் மக்களுக்கு எதிரான தேசிய பாதுகாப்பு சட்ட அமலாக்கம் ஆகியவை குறித்து பேசினார்.
இந்திய – பசிபிக் பிராந்தியம் தென் சீனக் கடல் பகுதி ஆகியவற்றில் சீனாவின் தலையீடு காரணமாக ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்தும் தெரிவித்தார்.
இத்தகைய சர்வதேச விதிமீறல் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கூட்டணி நாடுகளுடன் இணைந்து சீனாவை பொறுப்பேற்கச் செய்யும் என்றும் அன்டோனி பிளிங்கன் திட்டவட்டமாக தெரிவித்தாக, அவர் கூறினார்.