லண்டனில் இன்று மாலை நடந்த கத்தி குத்து சம்பவத்தில் இரண்டு பேர் உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kilburn-ல் உள்ளூர் நேரப்படி மாலை 5.40 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. பொலிசார் மற்றும் துணை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
பலத்த காயமடைந்த அந்த இரண்டு பேரும் தற்போது உயிருக்கு போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளதே தவிர, அவர்கள் தொடர்பான எந்த ஒரு முழு விவரமும் வெளியாகவில்லை.
இதற்கு முன்னர் தெற்கு லண்டனில் கடந்த வெள்ளிக் கிழமை Croydon பகுதியில் மட்டும் 5 கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளது. நடந்த கத்தி குத்தி சம்பவத்தால், ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், 10 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை, இருப்பினும் இது போன்ற வன்முறை தேவையற்றது முற்றிலும் வெறுக்கத்தக்கது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
காயமடைந்தவர்களில் எவரும் இப்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கருதப்படவில்லை எனவும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மெட்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த சனிக்கிழமை பிற்பகல் Oakfield சாலையில் உள்ள West Croydon நிலையம் அருகே 24 வயது மதிக்கத்தக்க 10-வது நபர் குத்தப்பட்டார்.
இதைத் தொடர்ந்து Croydon-ன் Wisbeach சாலையில் உள்ள இரண்டு பேர் கத்தி குத்து காயங்களுடன் கிடந்துள்ளனர். அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணையை துவங்கியுள்ளனர். மற்ற கத்தி குத்து சம்பவங்கள் குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.